கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

கர்நாடக பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு திங்கள்கிழமை நுழைவு வாயிலிலேயே அனுமதி மறுக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடக பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு திங்கள்கிழமை நுழைவு வாயிலிலேயே அனுமதி மறுக்கப்பட்டது.

கர்நாடகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பள்ளிகள் தடை விதிக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்த பதற்றமான சூழல் காரணமாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த வழக்கில் முழுமையான விசாரணை முடியும் வரை மத அடையாளங்களை குறிக்கும் வகையிலான ஆடைகளை அணிய கர்நாடாக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இன்றுமுதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாண்டியா மாவட்டத்தில் உள்ள ரோட்டரி பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளியின் நுழைவு வாயிலிலேயே ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து, பள்ளி வகுப்பறைக்குள் அனுமதிக்குமாறும், வகுப்பறைக்கு சென்ற பின் குழந்தைகள் ஹிஜாப் அணிய மாட்டார்கள் எனவும் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com