ஹிஜாப் அணிந்ததால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவிகள்
ஹிஜாப் அணிந்ததால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவிகள்

ஹிஜாப் அணிந்ததால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவிகள்

கர்நாடகத்தில் ஒருவாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், ஹிஜாப் அணிந்த மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகத்தில் ஒருவாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், ஹிஜாப் அணிந்த மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கலவரம் வெடித்ததால், ஒருவாரத்திற்கு பிறகு 1ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில் கரநாடகத்தில் பல்வேறு பள்ளிகள் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. 
மாண்டியா மாவட்டத்தில் மாணவிகளை ஹிஜாப் அணியாமல் பள்ளிக்குள் வர ஆசிரியர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஒரு சில மாணவிகள் மறுப்பு தெரிவித்ததால், வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். 

ஹிஜாப் அணிந்து வந்த ஒரு சில மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒருசில பெற்றோர், மாணவிகள் பள்ளிக்குள் வந்ததும் ஹிஜாப்பை கழற்றிவிடுவதாகவும், ஹிஜாப்புடன் வெளியே நிற்கவைக்க வேண்டாம் எனவும் ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com