ஜார்க்கண்டில் வனத்தைக் காக்க அணி திரண்ட பெண்கள்

வனத்தைப் பாதுகாப்போம்.. இந்த ஒற்றைச் சொல்லுக்கு உயிரூட்டி வருகிறார் 100 வயதைத் தொடும் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி.
ஜார்க்கண்டில் வனத்தைக் காக்க அணி திரண்ட பெண்கள்
ஜார்க்கண்டில் வனத்தைக் காக்க அணி திரண்ட பெண்கள்


ராஞ்சி: வனத்தைப் பாதுகாப்போம்.. இந்த ஒற்றைச் சொல்லுக்கு உயிரூட்டி வருகிறார் 100 வயதைத் தொடும் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி.

தனது காலம் முடிந்துவிட்டது. இனி என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்காமல், சுமார் 9 ஏக்கர் வனப்பகுதியை தனது போராட்டத்தால் மீட்டும், இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, தனது புரட்சிகர போராட்டத்துக்கு, அணி திரட்டியும் வருகிறார்.

வனத்தைக் காப்போம் திட்டம் என்ற பெயரில், 7 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 104 பெண்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் வெறும் போராட்டத்தை மட்டும் முன்னெடுக்கவில்லை. இவர்களுக்குள் நான்கு பிரிவாக பிரிந்து, காலை 6 - 9 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் என வனப்பகுதியைச் சுற்றிலும் காவல் காக்கிறார்கள். கையில் கொம்பு, குச்சிகளுடன் வனப்பகுதியிலிருக்கும் முக்கிய மரங்களை கணக்கெடுத்தும் வைத்துக் கொள்கிறார்கள்.

யாராவது மரம் வெட்டுவதைப் பார்த்தால் போதும், இந்தக் குழுவினர் அவர்களைச் சுற்றி வைத்து அபராதம் வசூலித்துவிடுகிறார்கள். அபராதம் எவ்வளவு தெரியுமா? ரூ.5,000. இதனால், அவர்களது பகுதியில் மரம் வெட்டுவது குறைந்து, வனப்பகுதியின் பரப்பளவும் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்ல, தலா 25 பேர் ஒவ்வொரு ஷிப்டிலும் வனப்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.இந்தப் பணிக்கு வரத் வரத் தவறினால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை கொண்டு வனப்பகுதியில் அரிய வகை மரங்கள் நட்டு பராமரிக்க பயன்படுத்துகிறார்கள் இந்த மகளிர் குழுவினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com