தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

தில்லியிலிருந்து நல்ல செய்தி சொன்ன சுகாதாரத் துறை அமைச்சர்

மும்பையில் கரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. அதுபோல தில்லியிலும் விரைவில் குறையும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.


புது தில்லி: மும்பையில் கரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. அதுபோல தில்லியிலும் விரைவில் குறையும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தில்லியில் தற்போது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அது குறையத் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுக்க கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று உச்சமடைகிறதா அல்லது குறைகிறதா என்பது தெரியாமல், கரோனா உறுதி செய்யப்படும் விகிதத்தைக் கணிக்க முடியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலும் கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com