9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை

கரோனா பரவல் தொடர்பாக 9 மாநில, யூனியன் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)


கரோனா பரவல் தொடர்பாக 9 மாநில, யூனியன் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

காணொலி முறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், தில்லி, ஜம்மு-காஷ்மீா், லடாக், சண்டீகா் ஆகிய மாநில, யூனியன் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சா்கள் பங்கேற்றனர்.

இதில் கரோனா பரவல் குறித்தும் அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

மேலும், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், கரோனா தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கடந்த வாரம் கரோனா பரவல் அதிகமுள்ள 6 மாநிலங்கள் பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அதில் மகாராஷ்டிரம், கா்நாடகம், தமிழ்நாடு, கேரளம், உத்தர பிரதேசம், தில்லி ஆகியவை இடம் பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com