தமிழகத்தில் 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு

தமிழகத்தில் இன்று 22,238 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு

தமிழகத்தில் இன்று 22,238 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,238 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக தொற்றுக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 3,998 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, இன்று மட்டும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 2,865 பேரும், செங்கல்பட்டில் 1,534 பேரும், திருப்பூரில்1,497 பேரும், சேலத்தில் 1,181 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

மற்றொருபுறம் மேலும் 26,624 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு இன்று வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 84,470-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 03,926 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  
கரோனா பாதிப்புக்குள்ளாகி இன்று மேலும் 38 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,544-ஆக அதிகரித்துள்ளது. தொற்று பரவல் குறைந்தாலும், கரோனா பரிசோதனைகளையும், மருத்துவக் கண்காணிப்பையும் குறைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com