மிகப்பெரும் வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி: பிரதமர் மோடி

மிகப்பெரும் வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி என்று பிரதமர் மோடி தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்,
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வந்த கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி திட்டத்தை மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. 

பிரதமர் மோடி தனது சுட்டுரையில், மிகப்பெரும் வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி. ஒரே நாடு ஒரே வரி என்ற தொலைநோக்கு பார்வை நிறைவேறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

புதிய விதிகளின்படி, பொருள்களுக்கும் சேவைகளுக்கும் 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3%, 1.5% என சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி 28 சதவீத வரி விதிக்கப்படும் ஆடம்பரப் பொருள்கள் மீது கூடுதலாக செஸ் வரி விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி காரணமாகப் பல்வேறு பொருள்களின் விலை குறைந்தது. ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு முன் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரி சராசரியாக 31 சதவீதம் வரை இருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வரி பெருமளவில் குறைந்தது. ஆனால், அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்காத வகையில் பல நிறுவனங்கள் பொருள்களைப் பழைய விலைக்கே விற்கும் நோக்கில், அவற்றின் மீதான அடிப்படை விலையை உயா்த்தின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com