மகாராஷ்டிர சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர் அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் பெரும் குழப்பத்திற்கு மத்தியில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்யப்பட்டதை தொடர்ந்து, பாஜகவுடன் இணைந்து சிவசேனை அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத், கடந்த வாரம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க | மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது
இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க, 145 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 160 வாக்குகள் பெற்று ஏக்நாத் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், உத்தவ் அரசில் துணை முதல்வராக பொறுப்பு வகித்தவருமான அஜித் பவாரை, எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸின் பேரவைக் கட்சித் தலைவர் ஜெய்ந்த் பட்டீல் முன்மொழிந்தார்.
இதை மகாராஷ்டிர சட்டப்பேரவை ஏற்றுக் கொண்டதாக பேரவை முதன்மைச் செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒரு தலைப் பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை: ப. சிதம்பரம்

எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!

398 சமையல் எரிவாயு உருளை பதுக்கல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரையில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

தென் மாவட்டங்களில் இன்று முதல் ஓபிஎஸ் பிரசாரம்!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

