வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குரங்கு அம்மை: மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :14 ஜூலை 2022, 12:34 pm

DIN

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்ததையடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக புணேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தெரிய வரும் என்றும் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதன்மை/ சுகாதாரச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை செய்ய வேண்டும். 

வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் குரங்கு அம்மை அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். 

நாட்டிற்குள் உள்நுழையும் அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், 

மாநிலங்கள், அதற்கான மருத்துவக்குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.