நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்ன? பேசினால் என்னாகும்?

ஊழல், நாடகம், கோழை உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என்று நாடாளுமன்ற செயலகம் கையேடு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கூறக்கூடாத வார்த்தைகள் என்ன?
நாடாளுமன்றத்தில் கூறக்கூடாத வார்த்தைகள் என்ன?


புது தில்லி: ஊழல், நாடகம், கோழை உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பேசக் கூடாது என்று நாடாளுமன்ற செயலகம் கையேடு வெளியிட்டுள்ளது.

இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தைகள் இனி, நாடாளுமன்ற அவைகளுக்குள் பேசக் கூடாத வார்த்தைகளாகின்றன.

வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டிருக்கும் இந்த கையேட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. பல தலைவர்கள், இந்த வார்த்தைகளைப் பேசுவோம். எங்களை அவையிலிருந்து நீக்குங்கள் என்று சாவல் விடுக்கும் வகையில் கூறியுள்ளன.

பொதுவாக, நாடாளுமன்றத்தில் ஆளும் மத்திய அரசு, தனது கொள்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை பட்டியலிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது மக்களவை செயலகம் அதுபோன்ற ஒரு வார்த்தைப் பட்டியலை வெளியிட்டு, இவற்றை மக்களவை, மாநிலங்களவை என எதிலும் கூறக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

அப்படி பட்டியலிடப்பட்டிருக்கும் வார்த்தைகள் என்ன?

ஊழல், ஒட்டுக்கேட்பு, வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கண்துடைப்பு, வெட்கக்கேடு, துரோகம் செய்தார், கரோனா பரப்புபவர், திறமையற்றர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம்,  சர்வாதிகாரி, அழிவுசக்தி, இரட்டைவேடம், பயனற்றது, கோழை, குழந்தைத்தனம், குற்றவாளி, பொய், முதலைகண்ணீர், அவமானம், போலித்தனம், ரவுடித்தனம், தவறாக வழிநடத்துதல், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், கழுதை, உண்மையல்ல என்பது போன்ற வார்த்தைகள் நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்த உகந்த வார்த்தைகள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூறினால் என்னாகும்?
மேற்கண்ட வார்த்தைகளை ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உரையின்போது கூறினால், அந்த வார்த்தைகள் நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com