நாடாளுமன்றத்துக்கு காவி உடையில் வரச்சொல்வார்களா?

நாடாளுமன்றத்தில் சில வார்த்தைகளைக் கூறக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மாநிலங்களவைத் தேர்தல்; தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவைத் தேர்தல்; தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு


புது தில்லி: நாடாளுமன்றத்தில் சில வார்த்தைகளைக் கூறக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தில், மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் கூறும் அனைத்து வார்த்தைகளும் தற்போது நாடாளுமன்றத்தில் பேசக் கூடாத வார்த்தைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதா என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கும் புதிய கையேட்டில், ஊழல், நாடகம், துஷ்பிரயோகம், அவமானம், சிறுபிள்ளைத்தனம், கரோனா பரப்பாளர் உள்ளிட்ட வார்த்தைகளை இனி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிர் ரஞ்சள் சௌத்ரி கூறுகையில், மத்திய அரசு வெளியிட்டிருக்கும் கையேட்டில், சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு அவற்றை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையே, மத்திய அரசு, நாடாளுமன்றத்துக்கு அனைவரும் காவி உடை அணிந்து வர வேண்டும் என்று சொல்லும். நாடாளுமன்றத்தில் விதிகளை வகுக்கும் குழு ஒன்று உள்ளது. இப்படியே விதிகளை வகுத்து இரண்டாவது குடியரசை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது, மோடி அரசை விமரிசித்து எதிர்க்கட்சிகள் கூறும் அனைத்து வார்த்தைகளும் தற்போது நாடாளுமன்றத்தில் கூறக்கூடாத வார்த்தைகளாகிவிட்டன என்று தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேரக் ஓ பிரையன், இவைகள் நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டதாக தெரியவில்லை மாறாக, பிரதமர் நரேந்திர மோடியின் பயத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்கிறார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் எப்போது?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அவா் நடத்தும் கடைசி நாடாளுமன்ற கூட்டத் தொடா் இதுவாக இருக்கும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் தொடா்பான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிவிட்ட நிலையில், ஆளும் பாஜக கூட்டணி மற்றும் எதிா்க்கட்சிகள் சாா்பில் இதுவரை வேட்பாளா்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com