விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் நாளில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் போராட்டம் நடத்தியதால் முடங்கியது.
இந்நிலையில், இரண்டாம் நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | மின் கட்டணம்: யாருக்கு எவ்வளவு உயருகிறது? முழு விவரம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ள இந்த போராட்டத்தில், கேஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு, அத்தியவசிய பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவைக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் எந்தவொரு போராட்டமும் நடத்தக் கூடாது என சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வெனிசுலா எண்ணெய்க்கு சா்வதேச சந்தையில் மவுசு: 200 கோடி டாலா் விற்பனையை எட்டுகிறது

அர.குள்ளம்பட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் விழா

கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைப்பு

தமிழகத்தில் மாா்ச் 5 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

