/

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. 

News image
Updated On :22 ஜூலை 2022, 9:08 am

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. 

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், இன்று பிற்பகல் 10 ஆம் வகுப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

மாணவர்கள் ​தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் காணலாம். 

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வில் 94.40% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 64,908 மாணவ, மாணவிகள் 95%-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 

இதில், 99.68% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 99.22% தேர்ச்சியுடன் பெங்களூரு மண்டலம் இரண்டாமிடமும், 98.97% தேர்ச்சியுடன் சென்னை மூன்றாமிடமும் பெற்றுள்ளது. 

கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 வரை சிபிஎஸ்இ  10 ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.