துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பகல் கனவு பலிக்காது!

ஒவ்வொருவரின் உள்ளத்தின் இயல்புகளைக் குறிப்பிடுவதே உளவியலாகும்.

News image

சித்தரிக்கப்பட்டது

Updated On :5 ஏப்ரல் 2026, 5:31 pm IST

ஒவ்வொருவரின் உள்ளத்தின் இயல்புகளைக் குறிப்பிடுவதே உளவியலாகும். மனித வாழ்க்கையில் அகத் தோற்றம், புறத்தோற்றம் என்ற இரு நிலைகள் உண்டு. அகச் செயல்பாடுகளே உள்ளத்தை ஆட்டி வைக்கின்றன. அவை புறத்தோற்றத்தின் வழி புலனாகின்றன. புறத்தார்க்குப் புலப்படுவது புறத்தோற்றம் மட்டுமேயாகும்.

களவுக்கால வாழ்க்கை நன்முறையில் இயங்குகிறது. களவானது கற்பில் முடியப் பொருள் தேடி வருதல் கடமையாகவும் முதன்மையாகவும் அமைகிறது. திருமணம் செய்து கொள்ளப் பொருள் தேடிச் சென்றான் தலைவன். அவனைக் காணாதவிடத்து அவள் மனம் கடலலை போல் நிலைகொள்ளாது தவிக்கிறது. அப்போது, அவன் நாட்டின் சோலைப் பகுதியையும் அங்கே மக்கள் உவகையுடன் இணைந்து குலவி இருப்பதையும் எண்ணிப் பார்க்கிறாள். அச்சூழலில் தலைவிக்கு கனவு தோன்றுகிறது. அக்கனவில் தலைவனும் தானும் சேர்ந்திருப்பது போல் கண்டு விழிக்கிறாள். இதைத் தன் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள்.

தோழியே! நம் ஊரிலே இருக்கும் மாமரத்தின் கிளையைப் பற்றித் தொங்கும் வெளவாலானது அழிசி என்னும் சோழ மன்னனுக்குரிய பெருங்காட்டில் உள்ள நெல்லிப்பழத்தின் இனிய புளிச்சுவையைச் சுவைத்தது போலக் கனவு கண்டது. அதே போன்று நானும் அவரோடு இணைந்திருப்பதாய்க் கனவு கண்டேன் என்கிறாள்.

உள்ளுர் மாஅத்த முள்எயிற்று வாவல்

ஓங்கல் அஞ்சினைத் தூங்குதுயில்

பொழுதின்

வெல்போர்ச் சோழர் அழிசியம்

பெருங்காட்டு

நெல்லியம் புளிச்சுவைக்

கனவி யாஅங்கு

......

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்

பெருந்தண் கானலும்

நினைந்த அப் பகலே

-(நற்றிணை 87)

என்ற நற்றிணைப் பாடலில், வெளவாலின் கனவோடு தலைவி கண்ட கனவு ஒப்பிடப்பட்டுள்ளது.

தன் சொந்த ஊரில் இருந்து கொண்டு, வெளவால் எங்கேயோ விளைந்த பழத்தை உண்ண விரும்புகிறது. கனவு காண்கிறது. அக்கனவு பகற்கனவு என்பதால் பலிக்காது. மேலும், வெளவால் இருக்குமிடம் வேறு; கனியிருக்குமிடம் வேறு. அந்த வெளவாலைப் போன்றே தலைவியும் ஊரில் இருந்து கொண்டு எங்கேயோ பொருள் தேடிச் சென்ற தலைவனை எண்ணி வருந்துகிறாள். தன்னை வெளவாலோடு ஒப்பிட்டுச் சொல்வது அவளது வருந்திய உள்ளத்தின் உளநிலையையும், ஆற்றொணாத்துயரத்தையும், இரங்கலையும் காட்டுகிறது.

இவ்வாறு பாடுதலின் வழி தலைவியின் மனத்துயர் சற்று குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.