‘நான் ஊழலுக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை’: மம்தா மவுனம் கலைத்தார்

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு முதன்முறையாக முதல்வர் மம்தா கருத்துத் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு முதன்முறையாக முதல்வர் மம்தா கருத்துத் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்கள் நியமனத்தில் முறைகேடு புகாா் தொடா்பாக அந்த மாநில அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பாா்த்தா சட்டா்ஜியை அமலாக்கத் துறை சனிக்கிழமை கைது செய்தது. அவரது உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டாா். மம்தா இதுக்குறித்து கூறியதாவது:

நான் ஊழலுக்கு துணைப்புரிவதில்லை. பாராளுமன்றத்திலிருந்து ஓய்வூதியமாக எனக்கு 1 லட்சம் வருகிறது. மாநில சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு 2 லட்சம் பெறுகிறேன்.  11 வருடத்தில் நான் எவ்வளவு சம்பாதித்து இருக்கிறேன் இப்போது கணக்கு போட்டு பாருங்கள். ஒரு பைசா மட்டும் இதுவரை எடுத்ததில்லை. என்னுடைய சேவை தன்னிச்சையானது. நண்பர்களே கடந்த இரண்டு நாட்களில் சில அரசியல் கட்சிகளின் அணுகுமுறையால் நான் வருத்தமும் மனமுடைந்தும் இருக்கிறேன்.

சுபாஷ் சந்திர போஷின் புத்தகத்தின் உள்ளது படி மக்கள் தவறு செய்வது இயல்பு. தவறு செய்வதும் சரி. யாரவது தவறு செய்தால் நாங்கள் யாரும் குறுக்கிட மாட்டோம். அவருக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் அதை அவர்களே சந்தித்தாக வேண்டும். 

நான் எல்லா பெண்களையும் மதிக்கிறேன். நான் உண்மையை வெளிவர விரும்புகிறேன். தீர்ப்பு உண்மையின் அடிப்படையில் வெளிவர வேண்டும். அதனடிப்படையில் யாருக்காவது வாழ்நாள் தண்டனைப் பெற்றாலும் நான் கவலைப்பட போவதில்லை.

விசாரணையின் போது அமலாக்கத்துறை கைப்பற்றிய பணக் குவியல்களுடன் எனது படத்தை ஏன் குறிப்பிட வேண்டும். பிஜேபியும், சிபிஐஎம்மும் அதைச் செய்கின்றன. நான் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், அவர்களின் துணிச்சலுக்காக அவர்களின் நாக்கை அறுத்திருப்பேன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com