மகளுக்கு பாலியல் வன்கொடுமை: மனைவி அளித்த புகாரில் கணவன் கைது

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் மகளுக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை அளித்ததாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
மகளுக்கு பாலியல் வன்கொடுமை: மனைவி அளித்த புகாரில் கணவன் கைது

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் மகளுக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை அளித்ததாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

புணேவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பிம்ரி சிஞ்சிவாத் பகுதியிலுள்ள 39 வயதுடைய நபர் தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மனைவி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்தனர்.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, 7 வயது மகளை தந்தையே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் இந்த சம்பவம் அடிக்கடி நடந்துள்ளதாக புகார் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து உரிய விசாரணைக்குப் பிறகு கணவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com