ஒடிசாவில் பென்சில் வாங்கச் சென்ற சிறுமி எரித்துக் கொலை

ஒடிசா மாநிலத்தில் பென்சில் வாங்கச் சென்ற 14 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் பென்சில் வாங்கச் சென்ற சிறுமி எரித்துக் கொலை (கோப்புப் படம்)
ஒடிசாவில் பென்சில் வாங்கச் சென்ற சிறுமி எரித்துக் கொலை (கோப்புப் படம்)


பாலாசோர்: தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர், குடியரசுத் தலைவராக பதவியேற்றிருப்பதை ஒடிசா கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், பென்சில் வாங்கச் சென்ற 14 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அப்பெண் தடுத்ததால், ஆத்திரத்தில், 28 வயது நபர், சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

பாலாசோர் மாவட்டத்தில், 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி, தயாநிதி ஜேனா என்பவரின் மனைவியிடம் கல்வி பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், ஞாயிறன்று காலை, பென்சில் வாங்கச் சென்ற சிறுமியை தயாநிதி ஜேனா வலுக்கட்டாயமாக அருகிலிருக்கும் கழிப்பறைக்குள் இழுத்துச் சென்று அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தீ வைத்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார் சிறுமி.  தயாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், பாலியல் பலாத்காரத்துக்கு மறுத்ததால் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தயாநிதியின் வீட்டுக்கு கல்வி படிக்க அந்தசிறுமி சென்று வந்துள்ளார். ஆனால், திடீரென சிறுமி அங்குச் செல்வதை நிறுத்திவிட்டார். 

கொலை குறித்து சிறுமியின் தாத்தா நாராயண் கூறுகையில், எங்களது பேத்தி வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். திடீரென பென்சில் வாங்க வேண்டும் என என்னிடம் பணம் வாங்கிக் கொண்டுச் சென்றார். அவர் இப்போது உயிரோடில்லை என்று கூறி கதறுகிறார்.

இது குறித்து ஜேனாவின் மனைவியிடம் கேட்டதற்கு, ஒரு சில மாதமாக சிறுமி தன்னிடம் கல்வி பயில வருவதில்லை என்றும், எதற்கான தனது கணவர் இந்தக் கொலையைச் செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com