'எங்கள் கட்சியினரின் மன உறுதியைக் குலைக்கும் முயற்சி'-  மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியை அமலாக்கத்துறை துன்புறுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
'எங்கள் கட்சியினரின் மன உறுதியைக் குலைக்கும் முயற்சி'-  மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியை அமலாக்கத்துறை துன்புறுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, 'அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியை துன்புறுத்துகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சரியில்லை. ஆனாலும், மீண்டும்  மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்படுகிறார். மேலும், இது காங்கிரஸ் கட்சியினரின் மன உறுதியைக் குலைக்கும் முயற்சி. ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். 

விலைவாசி உயர்வு பிரச்னையை கடந்த 7 நாட்களாக நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகிறோம். ஆனால், இந்த பிரச்னையை விவாதிக்க அரசு தயாராக இல்லை. மாறாக, விலைவாசி உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த எம்.பி.க்களை இடைநீக்கம் செய்கிறார்கள். அவர்களது இடைநீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து நாங்கள் அவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம்' என்று தெரிவித்தார். 

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு விசாரணைக்காக, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அமலாக்கத் துறையிடம் மூன்றாவது நாளாக இன்று ஆஜராகியுள்ளார். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக அவரிடம், கடந்த ஜூலை 21 ஆம் தேதி 2 மணி நேரமும், நேற்று 6 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com