அக்னிபத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

அக்னிபத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதிக்க உள்ளதாக எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அக்னிபத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

அக்னிபத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதிக்க உள்ளதாக எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே பல்வேறு விவாதங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகளும், குடியரசுத் தலைவர் குறித்து தவறாக பேசியதாகக் கூறி ஆளுங்கட்சியினரும் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் அக்னிபத் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் நாளை (ஆகஸ்ட் 1) எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன. அதற்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2) இதே விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அக்னிபத் திட்டம் குறித்து ஒருமித்த கருத்தோடு நாடாளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் விவாதிக்க உள்ளனர். ஆனால், அக்னிபத் திட்டம் குறித்த அவர்களது பார்வை வேறுபட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்னும் 10 நாட்களில் முடிய உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அக்னிபத் திட்டம் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த அக்னிபத் திட்டம் குறித்த விவாதத்தில் ஒவ்வொரு கட்சியின் எதிர்பார்ப்புகளும் வேறுபட்டுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில் இந்த திட்டத்தினை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சிலர் இந்த அக்னிபத் திட்டத்தில் சில மாற்றங்களை மட்டும் வலியுறுத்துகின்றனர்.

இந்த அக்னிபத் திட்டம் முழுவதுமாக திரும்பப் பெறப்பட வேண்டுமென ஹரியாணா மாநில காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீபேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் அக்னிபத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது எனக் கூறியதாக எதிர்க்கட்சிகளின் தரப்பில் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com