புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,582 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று ஒரு நாள் தொற்று பாதிப்பு 8,329 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,582 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,32,22,017 ஆக உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 44,513 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.10 சதவிகிதமாக உள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 4 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,761 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1,21 சதவிகிதமாக குறைந்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று 4,435 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,52,743 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 13,04,427 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1,95.07,08,541கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க |போரில் அதிபயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷியா ஆயத்தம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர் காரணமாக மாற்றுப் பாதையில் விமானங்களை இயக்க இந்திய விமானத் துறை அறிவுறுத்தல்!

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடும் 4 வீரர்கள்! யார்யார்?
ஐபிஎல்: ஹைதராபாத் அணியில் இருந்து ஜாக் எட்வர்ட்ஸ் விலகல்!

துரந்தர் படத்தின் டீசர், டிரைலரை கட் செய்த ஓஜாஸ் கௌதம் யார் தெரியுமா? யாமி கௌதமின் தம்பி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

