மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அக்னிபத் போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்: தெலங்கானா முதல்வர்

தெலங்கானா அக்னிபத் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்

News image
செகந்திராபாதில் போராட்டம்
Updated On :18 ஜூன் 2022, 4:46 am

DIN

தெலங்கானா அக்னிபத் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். 

4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்  கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. 

பிகார், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது. 

நேற்று  தெலங்கானா மாநிலம், செகந்திராபாதில் உள்ள ரயில் நிலையத்தில் திரண்ட 300-க்கும் மேற்பட்டோர் ஒரு பயணிகள் ரயிலுக்குத் தீ வைத்தனா். அப்போது கூட்டத்தைக் கலைக்க ரயில்வே பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.  

உயிரிழந்தவர் அம்மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பது தெரியவந்துள்ளது.  இதையடுத்து, ராகேஷ் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் பலியானவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.