அக்னிபத் திட்டம்: பொய்யான தகவல்கள் பரப்பிய 35 வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு தடை

அக்னிபத் திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பிய 35 வாட்ஸ்ஆப் குழுக்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அரசு தடை விதித்துள்ளது.
அக்னிபத் திட்டம்: பொய்யான தகவல்கள் பரப்பிய 35 வாட்ஸ்ஆப் குழுக்களுக்கு தடை


புதுதில்லி: அக்னிபத் திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பிய 35 வாட்ஸ்ஆப் குழுக்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அரசு தடை விதித்துள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்தத் திட்டத்தின் கீழ் வீரா்களைச் சோ்ப்பதற்கான பணிகளில் முப்படைகளும் ஈடுபட்டுள்ளன.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ராணுவ விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலா் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி, நாட்டை இளமைத் துடிப்புடன் உருவாக்கும் புரட்சிகரமான திட்டமே அக்னிபத் திட்டம். இந்தத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது. எனவே, இளைஞா்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். நமது இந்திய ராணுவம் ஒழுக்கமானது. அதில், வன்முறைக்கும் கலவரத்துக்கும் இடமில்லை. போராட்டக்காரா்களை சில தீய சக்திளும் சில ராணுவ பயிற்சிப் பள்ளிகளும் தூண்டுகின்றன.

அக்னிபத் திட்டத்தில் சேரும் ஒவ்வோா் இளைஞரும் தாங்கள் எந்தவொரு வன்முறையிலும் போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்று உறுதிமொழிச் சான்று அளிக்க வேண்டும். அதை காவல் துறை விசாரித்து சரிபாா்க்கும். காவல் துறையின் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ராணுவத்தில் சேர முடியும். ஒருவேளை காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தால், அவா்கள் ராணுவத்தில் சேர முடியாது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரா்களைச் சோ்க்கும் பணியை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டில் சுமாா் 46,000 போ் சோ்க்கப்படவுள்ளனா். அடுத்த 4-5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சத்தைத் தொடும். அக்னி வீரா்கள் பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் அவா்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் தெரிவித்தார்.

இந்நிலையில், அக்னிபத் திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பிய சமூக ஊடக கணக்குகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய உள்துறை அமைச்சகம்.  

அந்த வகையில் 35 வாட்ஸ்ஆப் குழுக்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு உள்ளது.

எனினும், இந்த வாட்ஸ்ஆப் குழுக்கள் பற்றிய விவரங்களோ அல்லது அவற்றின் அட்மின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்களோ எதுவும் வெளியிடப்படவில்லை. வாட்ஸ்ஆப் உண்மைச் சரிபார்ப்பிற்காக 8799711259 என்ற எண்ணை வெளியிட்டுள்ளது.

மேலும், தவறான தகவல்களை பரப்பி போராட்டம் நடத்தியதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாள்களில் (ஜூன் 15 முதல் ஜூன் 17 வரை), பிகாரில் சுமார் 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 130 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி சஞ்சய் சிங் கூறினார். அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், "சனிக்கிழமை 140 பேர் கைது செய்யப்பட்டனர்" என்று கூறினார்.

கிழக்கு மத்திய ரயில்வேயின் கூற்றுப்படி, பிகாரில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் ரயில்வே சொத்துக்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக சனிக்கிழமை வரை 60 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com