
கோப்புப்படம்
இந்தியாவில் புதிதாக 11,739 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிதாக 11,739 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,33,89,973 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 25 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,24,999 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா
மேலும் 10,917 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,27,72,398 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி இன்னும் 92,576 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் 0.21 சதவிகிதம். தேசிய அளவில் குணமடைவோர் விகிதம் 98.58 ஆக உள்ளது. .
தினசரி தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 2.59 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. வாராந்திர விகிதம் 3.25 சதவிகிதம்.
அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டில் இதுவரை மொத்தம் 197.08 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...