மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மும்பை கட்டட விபத்தில் பலி 10 ஆக உயர்வு! தொடரும் மீட்புப்பணி

மும்பையில் அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :28 ஜூன் 2022, 10:49 am

DIN

மும்பையில் அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குர்லா அருகே நாயக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Story image

இன்று காலை இருவர் உயிரிழந்ததாகவும் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 13 பேர். இன்னும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்கிறது. 

Story image

காயமடைந்தவர்கள் அனைவரும் கட்கோபர் மற்றும் சியான் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாவும் மும்பை ஆணையர் இக்பால் சிங் தெரிவித்துள்ளார். 

Story image

முன்னதாக விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.