தேர்தலுக்காக பெட்ரோல் விலை கட்டுப்படுத்தப்படவில்லை: பெட்ரோலிய துறை அமைச்சர்

தேர்தலுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை கட்டுப்படுத்தவில்லை என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக பெட்ரோல் விலை கட்டுப்படுத்தப்படவில்லை: பெட்ரோலிய துறை அமைச்சர்

தேர்தலுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை கட்டுப்படுத்தவில்லை என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷிய-உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர இருக்கும் நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ‘உலக விலையின் அடிப்படையில் தான் எண்ணெண் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. நாட்டின் ஒருபகுதியில் போர் நடந்தால் எண்ணெய் நிறுவனங்கள் அதைக் கருத்தில் கொள்ளும். குடிமக்களின் நலனுக்காக அரசு நல்ல முடிவை எடுக்கும். தேர்தலைக் கருத்தில் கொண்டு தான் பெட்ரோல் விலைகட்டுப்படுத்தப்பட்டது எனக் கூறுவது சரியல்ல. நமது எரிசக்தி தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதி அளிக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போர் உச்சத்தை அடைந்து வருகிற நிலையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கடந்த 10 நாள்களில் 110 டாலரிலிருந்து தற்போது 140 டாலரை நெருங்கிக் கொண்டிருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com