முதுநிலை நீட் தேர்வு: கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு

முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட் ஆஃப் மதிப்பெண் குறைக்கப்படுவதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
முதுநிலை நீட் தேர்வு: கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு

முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட் ஆஃப் மதிப்பெண் குறைக்கப்படுவதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

இதன்படி பொதுப்பிரிவினருக்கு 35% ஆகவும், பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30% ஆகவும், பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30% ஆகவும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 25% ஆகவும் கட் ஆஃப் குறைக்கப்பட்டுள்ளது. 

எனவே, குறைக்கப்பட்ட கட் ஆஃப் அடிப்படையில் புதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அதன் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்துக்கு, மத்திய பொது சுகாதார சேவை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

இளநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையரகம் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com