காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கா? சத்தீஸ்கர் முதல்வர் பதில்

மத்திய அரசு பெறும் வரியிலிருந்து காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு வழங்கிக் கொள்ளட்டும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்

மத்திய அரசு பெறும் வரியிலிருந்து காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு வழங்கிக் கொள்ளட்டும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

1990-ன் தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் வசித்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது நடந்த தாக்குதலும் அதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் காஷ்மீர் ஃபைல்ஸ். நடிகர்கள் அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார்.

கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்திற்கு பாஜக ஆளும் மாநில அரசுகள் வரிவிலக்குகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவையின் பாஜக எதிர்க்கட்சித் தலைவர் கெளசிக், மாநில அரசு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்க வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதுதொடர்பாக புதன்கிழமை பேசிய சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், “ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்பு மாநில அரசின் வரி வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசும் பெறுகிறது. தாங்கள் பெறும் மாநில அரசின் வரிவருவாயிலிருந்து காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

பின்னர், மாநில மக்கள் செய்தித் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தைப் பார்வையிட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இப்படத்தின் இரவு 8 மணி காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பிரிஜ் மோகன் அகர்வால் மாநில காங்கிரஸ் அரசு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை மக்கள் அதிகளவு காண்பதற்கு எதிராக திரையரங்கங்களுக்கு நெருக்கடி கொடுத்துவருவதாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com