
கோப்புப் படம்.
துர்காபூர் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் திடீரென்று குலுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து வங்க மாநிலம் துர்காபூருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று சென்றுகொண்டிருந்தது. தரையிறங்குவதற்கு முன்பாக அந்த விமானத்தில் திடீரென டர்புலென்ஸ் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் விமானம் சிலநிமிடம் குலுங்கியது. அப்போது சீட் பெல்ட்டை சரியாக அணியாதவர்கள் உள்ளிட்ட 12 பயணிகள் காயமடைந்தனர். இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. காயமடைந்த பயணிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிமதிக்கப்பட்டனர்.
எதிர்பாராதவிதமாக நடைபெற்ற துரதிருஷ்டவசமான நிகழ்வுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.