கேரளத்தில் 3 லட்சம் தாய்மார்களுக்கு சைபர் பாதுகாப்பு பயிற்சி

கேரளத்தில் உள்ள சுமார் 3 லட்சம் தாய்மார்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த பயிற்சி மே 7-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. 
கேரளத்தில் 3 லட்சம் தாய்மார்களுக்கு சைபர் பாதுகாப்பு பயிற்சி

கேரளத்தில் உள்ள சுமார் 3 லட்சம் தாய்மார்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த பயிற்சி மே 7-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. 

கேரள உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம்(KITE),  லிட்டில் கே.ஐ.டி.இ, ஐடி கிளப்களுக்கு பயிற்சிப் பணியை மாநில அரசு ஒப்படைத்துள்ளது.

லிட்டில் கே.ஐ.டி.இ, ஐடி கிளப் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பதிவு செய்பவர்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சைபர் பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று KITE யின் சிஇஓ கே.அன்வர் சதாத் தெரிவித்தார்.

கே.ஐ.டி.இ.யின் சிஇஓ கே.அன்வர் சதாத் கூறுகையில், 

ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஐந்து அமர்வுகள் உள்பட மூன்று மணி நேரத்திற்குள் பயிற்சி முடிக்கப்படும். 

முதல் அமர்வில் ஸ்மார்ட் போன்கள், இணையம் மற்றும் அதன் பாதுகாப்பான பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிமுக அமர்வாக இருக்கும். 

இரண்டாவது அமர்வு அலைப்பேசி பயன்பாடு குறித்து கவனம் செலுத்துகிறது. தொலைபேசிகள், கடவுச்சொற்களின் பாதுகாப்பு, ஒடிபி.க்கள் பின்,.கள் போன்றவை இருக்கும். 

மூன்றாவது அமர்வில் போலிச் செய்திகளைக் கண்டறிதல், உண்மைகளைச் சரிபார்த்தல் மற்றும் போலிச் செய்திகளைத் தடுப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தும். 

நான்காவது அமர்வில் சைபர் தாக்குதல்கள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து சொல்லித்தரப்படும். 

இறுதி அமர்வில், இணையம்-உலகம் மூலம் எல்லையற்ற நோக்கத்துடன் அழைத்துச் செல்கிறது என்பதை விளக்கும். 

இந்தப் பயிற்சியானது 30 பங்கேற்பாளர்களைக் கொண்ட குழுவாக நடத்தப்படும். இதில் தகுதி பெற்ற ஆசிரியர்களால் வழிநடத்தப்படும்
 
மாநில மற்றும் மாவட்ட அளவில் 4,000 ஆசிரியர்கள் மற்றும் 8,000 மாணவர்களுக்கு இதுவரை பயிற்சி நிறைவடைந்துள்ளது, மேலும் மே 7 முதல் 20 வரை நடைபெறவுள்ள மாபெரும் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பான பயன்பாடு குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும் என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com