தகுதியானவர்களுக்கு வேலை வழங்குவது உறுதி: பகவந்த் மான்

  பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆள்சேர்ப்பு இயக்கத்தை தொடக்கி வைத்து, தகுதியானவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

சண்டிகர்:   பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆள்சேர்ப்பு இயக்கத்தை தொடக்கி வைத்து, தகுதியானவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்குவதற்கான  அரசின் உறுதிப்பாட்டை வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தி கூறினார்.

வேலை வழங்குவதற்கான செயல்முறை முற்றிலும் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று பகவந்த் மான் உறுதியளித்தார்.

பரிந்துரைகள் மற்றும் லஞ்சம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவிதமான நியாயமற்ற நடைமுறைகளிலும்  ஆள்சேர்ப்பு இயக்கம் செயல்படாது என்று முதல்வர் கூறினார்.

மாநில அரசு ஏற்கனவே செய்தித்தாள்களில் விரிவான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை,  நிறுவனம் மற்றும் தேர்வர்களுக்கு வசதியாக  துறை இணையதளங்களின் இணைப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.

இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதியளித்த முதல்வர் பகவந்த் மான், இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக  அரசு மற்றும் தனியார் வேலைகளை மாநில அரசு விரைவில் கொண்டு வரும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com