தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தில்லியில் கரோனா இறப்பு மறைக்கப்படவில்லை: சத்யேந்தர் ஜெயின்

தலைநகர் தில்லியில் எந்த தகவலும் மறைக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். 

News image

சத்யேந்தர் ஜெயின்

Updated On :6 மே 2022, 11:20 am

இந்தியாவில் கரோனா இறப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் சர்ச்சைக்கு மத்தியில், தலைநகர் தில்லியில் எந்த தகவலும் மறைக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 

தில்லியில் கரோனா இறப்புகள் குறித்த தரவுகள் உண்மையானவை, ஏறக்குறைய 25,600 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் கணக்கிடப்பட்டுள்ளன. ஒரு இறப்பு கூட மறைக்கப்படவில்லை. 

இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு 47 லட்சம் இந்தியர்கள் இதுவரை இறந்துள்ளனர். அரசு கூறுவது போல் 4.8 லட்சம் இல்லை அறிவியல் பொய் சொல்லவில்லை, மோடி கூறுகிறார். அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு மதிப்பளிக்கவும். அவர்களுக்கு கட்டாயம் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். 

காங்கிரஸ் தலைவரின் டிவிட்டர் பதிவுக்கு பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. பிரதமர் மோடியை அவதூறு செய்ய காந்தி முயற்சிக்கிறார் என்று கூறியது. 

கரோனா இறப்பு தொடர்பான மதிப்பீடுகளைக் கணிக்க உலக சுகாதார அமைப்பின் கணித மாதிரிகளைப் பயன்படுத்துவது, இந்தியா கடுமையாக எதிர்த்துள்ளது. உண்மையான தரவு உள்ளது என்று கூறியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.