தில்லி: தில்லி தீ விபத்து தொடர்பாக 2 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் தலைமறைவானதைத் தொடந்து அவரை தேடும் பணியில் தில்லி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கடுமையாகப் போராடி இரவு 10.30 மணிக்குத் தீயை அணைத்தனர்.
இதையும் படிக்க: கேஜிஎஃப் 3: தயாரிப்பாளரின் திட்டம் என்ன?
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சம்பவ இடத்துக்கு இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டனர்.
கட்டடத்தின் உரிமையாளர்களான ஹரிஷ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்த கட்டட உரிமையாளர் மணீஷ் லக்ரா என்பவர் தலைமறைவானார். தொடந்து அவரை தேடும் பணியில் தில்லி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27-இல் இருந்து சற்று முன்பு 30 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆங்கிலேயர் கால வாய் பூட்டு சட்டத்துக்கு இணையாக.. உதயநிதி கைதுக்கு பிரேமலதா கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK

உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



