
கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை
புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க.. அச்சமூட்டிய கனவுகள்: பல கோடி மதிப்புள்ள கோயில் சிலைகளை ஒப்படைத்த திருடா்கள்
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க.. எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க.. சிபிஐ சோதனை சுவாரஸ்யமானது: சொல்வது யார்?
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...