காங்கிரஸ் தலைவர் ஹார்திக் படேல் ராஜிநாமா

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹார்திக் படேல் புதன்கிழமை கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஹார்திக் படேல்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஹார்திக் படேல்.


குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹார்திக் படேல் புதன்கிழமை கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகின்றது. வருகின்ற தேர்தலில், குஜராத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த செயல் தலைவர் ஹார்திக் படேல், கடந்த வாரம் டிவிட்டர் சுயகுறிப்பிலிருந்து காங்கிரஸ் கட்சியை நீக்கினார்.

தொடர்ந்து, இன்று காலை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை தேர்தல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க படேல் சமூகத்தினரின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், படேல் சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவரான ஹார்திக் படேல் விலகியுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டிற்காக போராட்டங்கள் நடத்தியதன் மூலம் பிரபலமானவர் ஹார்திக். தொடர்ந்து, காங்கிரஸில் இணைந்த அவருக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com