
உச்ச நீதிமன்றம்
புதுதில்லி: பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்கலாம் எனவும் கூறியுள்ளது.
பணியிடங்களில் விசாகா வழிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக மனு மீது பதிலளிக்க அனைத்து மாநில, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது
அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.