தில்லியில் கனமழை: வீடுகள் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயம்

தில்லியில் இன்று காலை பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
தில்லியில் கனமழை: வீடுகள் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயம்

தில்லியில் இன்று காலை பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நகரின் ஜவல்புரி, கோகல்புரி, சங்கர் சாலை மற்றும் மோதி நகர்ப் பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களுக்கு முன் கடுமையான வெப்பம் தகித்து வந்த நிலையில், திங்கள்கிழமை காலை இடியுடன் கூடிய கனமழையால் தில்லி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். 

தலைநகரின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இந்த பருவத்தின் முதல் மிதமான புயல் இது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீயணைப்புத் துறையின் கூற்றுப்படி, 

மேற்கு தில்லியின் ஜவல்புரியில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் லேசான காயம் அடைந்தனர். மூவரும் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடகிழக்கு தில்லியின் கோகல்புரியில் மற்றொரு வீடு இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து 2 டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தில்லி தீயணைப்பு சேவை இயக்குனர் அதுல் கர்க் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மேற்கு தில்லியின் மோதி நகர் பகுதியில் ஒரு வீடு இடிந்து விழுந்ததாகவும், அங்கு இரண்டு மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 

மூன்று பேர் காயமடைந்து ஆச்சார்யா பிக்ஷு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 

மத்திய தில்லியில் உள்ள சங்கர் சாலைப் பகுதியில் மற்றொரு வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் லேசான காயம் அடைந்தனர் மற்றும் சிகிச்சைக்காக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 

காயமடைந்தவர்கள் அனைவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் விரைவில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புயலைத் தொடர்ந்து வேரோடு சாய்ந்த மரங்கள் தொடர்பான 62 பிசிஆர் அழைப்புகள் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

புயலின் போது மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 8 வாகனங்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com