என்னக் கொடுமை? ரூ.2,500க்கு விற்கப்பட்ட போலி ரத்தம் 

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட தனது 3 வயது குழந்தைக்காக ரூ.2,500 செலுத்திய வாங்கிய ரத்தம் போலியானது என மருத்துவர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்த நபர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
என்னக் கொடுமை? ரூ.2,500க்கு விற்கப்பட்ட போலி ரத்தம் 
என்னக் கொடுமை? ரூ.2,500க்கு விற்கப்பட்ட போலி ரத்தம் 


ரஞ்சி: தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட தனது 3 வயது குழந்தைக்காக ரூ.2,500 செலுத்தி வாங்கிய ரத்தம் போலியானது என மருத்துவர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்த நபர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலி ரத்தம் தயாரித்து விற்பனை செய்யும் கும்பல் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிகார் மாநிலம் ஜமூயைச் சேர்ந்த தினேஷ் யாதவ், தலசீமியா நோய் பாதித்த தனது 3 வயது மகளுக்கு ரத்தம் ஏற்றுவதற்காக தியோகர் வந்தார். அப்போது, குழந்தைக்கு ரத்தம் ஏற்றுவதற்கான பணிகளை தொடங்கிய மருத்துவர்கள், தினேஷ் யாதவ் கொண்டு வந்த ரத்தப் பாக்கெட்டில் அதன் விவரங்களோ எந்த ரத்த வங்கியிலிருந்து வந்தது என்ற விவரமோ இல்லை என்பதை கண்டறிந்தனர். அப்போதுதான் அது போலி ரத்தம் என்பதும் தெரிய வந்தது.

உடடியாக இது குறித்து தியோகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியிருக்கிறது.

அப்போது இது குறித்து தினேஷ் யாதவிடம் கேட்டபோது, ரத்த வங்கியின் வாசலில் நின்றிருந்த மூன்று பேர் தன்னை அணுகி, ரத்தம் வழங்க ரூ.5000 கேட்டுள்ளனர். அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால், 2,500 கொடுத்து இந்த ரத்தப் பாக்கெட்டை வாங்கியதாகவும், பணத்தைக் கொடுத்ததுமே அவர்கள் ரத்தத்தை கொடுத்ததாகவும், அதனை மருத்துவமனையில் கொடுத்தபோது, அது போலியானது என்று செவிலியர்கள் கூறியதாகக் குறிப்பிடுகிறார். ரத்த வங்கிகளை கண்காணிக்கும் செஞ்சிலுவை அமைப்பும், அந்த ரத்தத்தை பரிசோதித்து அது போலியானது என்பதை உறுதி செய்துள்ளது.

தலசீமியா பாதித்த தனது மகள் உயிருடன் இருக்க வேண்டுமானால் மாதந்தோறும் ரத்தம் செலுத்த வேண்டும் என்றும், மாதந்தோறும் ரத்த வங்கிக்குச் செல்லும் தன்னை அடையாளம் கண்டு, இந்த மோசடி நடைபெற்றிருக்கலாம் என்றும் தினேஷ் யாதவ் கூறுகிறார்.

அது மனிதனின் ரத்தமா? விலங்கின் ரத்தமா? அல்லது வேறு ஏதேனுமா?  என்றும், போலி ரத்தத்தை விற்பனை செய்த நபர்கள் குறித்தும் காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com