
ஒற்றைக் காலில் குதித்து குதித்து பள்ளிச் செல்லும் சிறுமி
காலை பறித்த விபத்தால் பாவம் அந்த 10 வயது சிறுமியின் தன்னம்பிக்கையை பறிக்க முடியவில்லை. அதனால்தான். தனது ஒற்றைக் காலில் குதித்தபடி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று வருகிறார்.
பிகார் மாநிலம் ஜமூய் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சீமா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் சீமா தனது ஒரு காலை இழந்துவிட்டார். பல்வேறு சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஒற்றைக் காலை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை.
இதையும் படிக்க.. சிரிப்பென்றால் ஹா..ஹா.. என்று ஸ்மைலி போடுவது அல்ல: அதற்கும் மேல
படிக்க வேண்டும்.. மற்ற குழந்தைகளைப் போல பள்ளியில் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பூர்த்தி செய்ய, ஒரு கிலோ மீட்டர் தொலைவு, என்பது மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்தது. தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா என்ற திரையிசைப்பாடல்படி, அந்த ஒற்றைக் காலுடன் பள்ளிக்குப் புறப்படுகிறார் சீமா.
A 10yr old little dalit girl Seema Manjhi from Jamui Bihar, wants to become a teacher when she grows up. Even troubles have given up in front of his courage. Seema goes to school daily, walking one kilometer on foot, and wants to study diligently...pic.twitter.com/Ajl8nqJ6Tq
— The Dalit Voice (@ambedkariteIND) May 25, 2022
புத்தகப் பையை தனது தோளில் சுமந்து கொண்டு, ஒற்றைக் காலால் குதித்து குதித்து பள்ளிச் செல்கிறார். அவரைப் பார்க்கும் பலரும், அவருக்கு உதவ முன் வருகிறார்கள்.
இவரைப் பற்றிய விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சரியான வீடு இல்லாததால் வீடு கட்டித்தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இதையும் படிக்க.. கைதி எண் 137683: சிறையில் என்ன சாப்பிடுகிறார் சித்து?
ஆரம்பத்தில் குதித்து குதித்து பள்ளிக்குச் செல்வது மிகுந்த கால்வலியை ஏற்படுத்தும். ஆனால் நாளடைவில் அதுவே பழகிவிட்டது என்கிறார் சிரித்தபடி சீமா.
மற்ற பிள்ளைகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் உற்சாகத்துடன் பள்ளியில் பாடம் பயிலும் சீமா.. தன்னம்பிக்கையின் எல்லையாக விளங்குகிறார்.