கைதி எண் 137683: சிறையில் என்ன சாப்பிடுகிறார் சித்து?

பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கையின்படி உணவுகளை வழங்குமாறு சிறைத் துறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தர
கைதி எண் 137683: சிறையில் என்ன சாப்பிடுகிறார் சித்து?
கைதி எண் 137683: சிறையில் என்ன சாப்பிடுகிறார் சித்து?


பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கையின்படி உணவுகளை வழங்குமாறு சிறைத் துறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதியவரை தாக்கிய வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து (58), பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மத்திய சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

‘மத்திய சிறையில் அறை எண்.10-இல் மற்ற 4 கைதிகளுடன் ஒருவராக அடைக்கப்பட்டுள்ள சித்துவின் கைதி எண் 137683 என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, சித்துவை பரிசோதித்த மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு, சிறைத் துறை கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை உள்ளூர் நீதிமன்ற நீதிபதி முன்பு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவக் குழு பரிந்துரையின்படி சித்துவுக்கு உணவு வழங்க, கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, அவருக்கு காய்கறி, பழங்களை உணவில் சேர்க்கவும், நெய் உள்ளிட்ட கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, மருத்துவக் குழுவினர் அளித்திருக்கும் பரிந்துரையில், 
காலை உணவில், சூரியகாந்தி, முலாம்பழ, சியா விதைகளின் கலவை, பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு உள்ளிட்டவையும், பிற்பகலில் பீட்ரூட், பாகற்காய், காரட் போன்றவற்றை பழச்சாறாகவும், தர்பூசணி, கிவி, ஸ்டிராபெர்ரி, கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களும் கொடுக்கலாம்.

மதியத்துக்கு ஒரு சப்பாத்தியுடன் காய்கறிகள், லஸ்ஸி உள்ளிட்டவையும், மாலையில் ஒரு டீயுடன் பனீர் துண்டுகள், இரவு உணவில் காய்கறிகளின் கலவை, பருப்பு சூப், கருப்புக் கடலை சூப் போன்றவையும் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு சீமை சாமந்தி டீ கொடுக்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கின் விவரம்

34 ஆண்டுகளுக்கு முன்பு 65 வயது முதியவரை தாக்கி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்த வழக்கில், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீா்ப்பளித்தது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி தன் நண்பா்களுடன் காரில் சென்ற நவ்ஜோத் சிங் சித்து, சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளாா். அப்போது, பின்னால் காரில் வந்த குா்நாம் சிங் (65) என்பவா், தனது வாகனத்துக்கு வழிவிடுமாறு சித்துவிடம் கூறியுள்ளாா். இதில் இரு தரப்பிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சித்து தாக்கியதில் குா்நாம் சிங் காயமடைந்துள்ளாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.

இந்த வழக்கில், முறையீடு, மேல்முறையீடு, மறு ஆய்வுகள் கடந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு, சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பைத் தொடா்ந்து, பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த நவ்ஜோத் சிங் சித்து, பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். கடுங்காவல் தண்டனை என்பதால், சிறையில் சித்துவுக்கு பணி கொடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த மத்திய சிறையில், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவா் பிக்ரம் சிங் மஜிதியா போதைப் பொருள் வழக்கில் அடைக்கப்பட்டுள்ளாா். பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் அமிருதசரஸ் கிழக்கு தொகுதியில் சித்துவுக்கு எதிராக இவா் போட்டியிட்டாா். இவா்கள் இருவரும், அந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் ஜீவன் ஜியோத் கெளரிடம் தோல்வியைத் தழுவியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com