சித்து மூஸேவாலா கொலை சதி திட்டம் தீட்டப்பட்டது எங்கே? அதிர்ச்சித் தகவல்

பஞ்சாபி பாடகரான சித்து மூஸேவாலா (27) அடையாளம் தெரியாத நபா்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.
சித்து மூஸேவாலா கொலை சதி திட்டம் தீட்டப்பட்டது எங்கே? அதிர்ச்சித் தகவல்
சித்து மூஸேவாலா கொலை சதி திட்டம் தீட்டப்பட்டது எங்கே? அதிர்ச்சித் தகவல்


பஞ்சாபி பாடகரான சித்து மூஸேவாலா (27) அடையாளம் தெரியாத நபா்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பஞ்சாப் மாநிலத்தில் எம்எல்ஏக்கள் உள்பட 424 பேரின் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக ஆளும் ஆம் ஆத்மி அரசு சனிக்கிழமை அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் பிரபல பாடகராக இருந்தவா் சித்து மூஸேவாலா. இவா் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். கடந்த சனிக்கிழமை அவா் உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில காவல் துறை திரும்பப் பெற்றது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள மான்சா மாவட்டத்தில் சித்து மூஸேவாலாவை அடையாளம் தெரியாத நபா்கள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளார். இந்த கொலைச் சம்பவத்தில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளி லாரன்ஸ் பிஷ்நோயை ரிமாண்டில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

சம்பவம் குறித்து மூஸேவாலாவின் தந்தை பல்கெளர் சிங் கூறுகையில், எனது மகன் வந்த காரை நோக்கி, எதிரே வாகனத்தில் வந்தவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து என்ஐஏ அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும், பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து ரகசிய ஆவணங்களைக் கசிய விட்ட அததிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் கூறியதாவது: மான்சா மாவட்டம் ஜவாஹா்கே கிராமத்தில் தனது வாகனத்தில் சித்து மூஸேவாலா இரண்டு நண்பா்களுடன் சென்று கொண்டிருந்தாா். அப்போது மூவா் மீதும் அடையாளம் தெரியாத நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இதில் மூவரும் காயமடைந்தனா். மூஸேவாலாவின் உடலில் நிறைய தோட்டாக்கள் பாய்ந்திருந்தன என்று தெரிவித்தாா்.

மூவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மூஸேவாலா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். எஞ்சிய இருவா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தும் என மாநில டிஜிபி வி.கே.பாவ்ரா தெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘சித்து மூஸேவாலாவின் பாதுகாப்புக்காக அளிக்கப்பட்டிருந்த 2 காவலா்களை சம்பவத்தின்போது அவா் அழைத்துச் செல்லவில்லை. பஞ்சாபில் லாரன்ஸ் பிஷ்னோய், லக்கி பாட்டியல் என்ற 2 குழுவுக்கு இடையே பகை இருந்துள்ளது. இதற்கும் இந்த சம்பவத்துக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com