என்னதான் ஆனது டிவிட்டருக்கு? பயனாளர்கள் கேள்வி

சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தை வெள்ளிக்கிழமை காலை முதல் பயன்படுத்த முடியாமல் பல பயனாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
என்னதான் ஆனது டிவிட்டருக்கு? பயனாளர்கள் கேள்வி

புது தில்லி: சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தை வெள்ளிக்கிழமை காலை முதல் பயன்படுத்த முடியாமல் பல பயனாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாட்டின் பல மாநிலங்களில், டிவிட்டர் பக்கத்தை லாக்-இன் செய்ய முடியாமல், சிக்கல் நிலவுகிறது. அந்தப் பக்கத்தில் ஏதோ பிரச்னை உள்ளது. ஆனால் கவலை வேண்டாம்.. மீண்டும் முயற்சிக்கவும் என்ற தகவல் மட்டுமே வருகிறது. மீண்டும் முயற்சித்தாலும், அதே தகவல்தான்.

இது குறித்து டிவிட்டர் பயனாளர்கள் பலரும், தங்களது புகார்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இன்ற அதிகாலை 3 மணியளவில் இந்தப் பிரச்னை சிறிதாகத் தொடங்கியது. பிறகு 7 மணிக்கு பல பகுதிகளுக்கும் இது அதிகரித்தத்கக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் முழுக்க டிவிட்டர் குறித்து பல்வேறு தலைப்புச் செய்திகள் வந்தன. அதற்காக எலான் மஸ்க்குக்குத்தான் நன்றி கூற வேண்டும். அவர்தான் கடந்த வாரம் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி, அதன் முக்கிய நிர்வாகிகளை பணியிலிருந்து நீக்கினார்.

இன்று, டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கும் பணி நீக்கம் செய்வதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்பட விருப்பதாகவும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com