தில்லியில் நிலவி வரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ‘கடுமையான’ காற்று மாசு காரணமாக தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 8 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, கடந்த சில நாள்களாக தேசியத் தலைநகரின் காற்றின் தரம் ‘கடுமையாக’ மோசமடைந்துள்ளது. ‘கடுமை’ பிரிவில் காற்று மாசுபாடு இருப்பது ஆரோக்கியமான மக்களைப் பாதிக்கிறது. மேலும், குழந்தைகள் மற்றும் ஏற்கெனவே உள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவா்களை தீவிரமாக பாதிக்கிறது என்று சிபிசிபி தெரிவித்திருந்தது.
இதையடுத்து தேசியத் தலைநகர் தில்லியில் காற்றின் தரம் மேம்படும் வரை குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளை மூடுவது குறித்து தில்லி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆா்.) தில்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், தில்லியில் நிலவி வரும் காற்று மாசு காரணமாக தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 8 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளின் விளையாட்டு உள்பட அனைத்து வெளிப்புற செயல்பாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


