சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பெங்களூரு விமான நிலையத்தில் டிரோன்கள் பயன்படுத்த அனுமதி

பெங்களூருவில் உள்ள கேம்கேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் இரண்டாவது முனையத்தில் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க டிரோன்களைப் பயன்படுத்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

News image
பெங்களூரு விமான நிலையத்தில் டிரோன்கள் பயன்படுத்த அனுமதி
Updated On :5 நவம்பர் 2022, 12:24 pm

DIN


புது தில்லி: பெங்களூருவில் உள்ள கேம்கேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் இரண்டாவது முனையத்தில் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க டிரோன்களைப் பயன்படுத்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த காரணங்களுக்காக டிரோன்களைப் பயன்படுத்த விமான நிலைய அதிகாரிகள் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், இன்று அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அனுமதி கிடைத்திருப்பதோடு, விமான நிலைய நிர்வாகம், கூடுதலாக மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகத்திடமும், மத்திய ஆயுதப்படையிடமும் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அனுமதி பெற்ற பிறகு, அது ஒரு மாத காலத்துக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அதற்குள், எந்தப் பணிக்காக டிரோன்கள் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டதோ, அந்தப் பணிகளை முடிக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.