இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் இணைந்த பிரியங்கா காந்தி!

மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ள ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.

News image
Updated On :24 நவம்பர் 2022, 6:21 am

DIN

மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ள ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார்.

தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் என பல்வேறு மாநிலங்களைக் கடந்திருக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மத்திய பிரதேசத்திற்குள் நேற்று நுழைந்தது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் இன்று 78வது நாளாக மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது.

Story image

இந்நிலையில், இன்றைய நடைப்பயணத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மகன் ரைஹன் வதேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார். மேலும், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் பங்கேற்றார்.

மேலும், ம.பி.யில் அடுத்த 10 நாள்கள் 7 மாவட்டங்களில் நடைப்பயணம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.