வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்: ஜம்முவின் 3 மாவட்டங்களில் போலீசார் சோதனை! 

பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து சில பத்திரிகையாளர்களுக்கு ஆன்லைனில் மிரட்டல் வந்ததையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

News image

கோப்புப்படம்

Updated On :24 நவம்பர் 2022, 6:46 am

பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து சில பத்திரிகையாளர்களுக்கு ஆன்லைனில் மிரட்டல் வந்ததையடுத்து, ஜம்மு-காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஆன்லைன் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தல் வழக்கு தொடர்பாக ஸ்ரீநகர் பத்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பல இடங்களில் தேடுதல் நடத்தப்படுகிறது என்று ஸ்ரீநகர் காவல்துறை ட்வீட் செய்துள்ளது. 

இதே வழக்கில் சில நாள்களுக்கு முன்பு இதேபோன்ற தேடுதல்களின் போது கிடைத்த தடயங்களைத் தொடர்ந்து தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். 

பயங்கரவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படும் 'காஷ்மீர் ஃபைட்' என்ற ஆன்லைன் பக்கம், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர்கள் பணிபுரிவதாகக் குற்றம் சாட்டி அவர்களின் பட்டியலையும் வெளியிட்டது.

இதன்காரணமாக, குறைந்தது ஐந்து உள்ளூர் பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.