நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும்: கிரண் ரிஜிஜூ

நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும்: கிரண் ரிஜிஜூ

நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு நாள் இன்று (நவம்பர் 26) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டனர். 

அப்போது சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளில் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. ஆனால், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும். ஆனால், சில மாநிலங்கள் இந்த விஷயத்தில் மாற்றம் கொண்டுவர முன்வருதில்லை. கீழ் நீதிமன்றங்கள் அரசின் கவனத்தைப் பெற்றுள்ளது. தேங்கிக் கிடக்கும் வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். கீழ் நீதிமன்றங்களில் நிலுலையில் உள்ள வழக்குகள் 5 கோடியை நெருங்கி வருகிறது. சுதந்திரம் அடைந்த கடந்த 70 ஆண்டுகளாக பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீதித்துறையில் பாலின சமத்துவத்தை கொண்டுவருவது அவசியம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com