
கேரளத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள யார் மீதும் எனக்கு கோபமில்லை என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் கொச்சியில் நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு: பிரதமர்
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: நான் கட்சியில் உள்ள யாருக்கும் எதிராக எதுவும் பேசவில்லை. கட்சியின் வழிகாட்டுதலை மீறியும் நடக்கவில்லை. இருப்பினும், இதுபோன்ற சர்ச்சைகள் எவ்வாறு உருவாகிறது என்பது எனக்குப் புரியவில்லை. நான் மனவருத்ததிலும் இல்லை, யார் மீதும் கோபமாகவும் இல்லை. நான் யார் மீதும் பழிசுமத்தவில்லை. என்னுடைய தரப்பில் இருந்து எந்த ஒரு புகாரும் தரப்படவில்லை. எங்களுக்குள் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. நான் என் கட்சியில் உள்ளவர்களிடத்தில் பேசவும், அவர்கள் என்னிடத்தில் பேசவும் எதற்காக தயங்கப் போகிறோம் என்றார்.
இதையும் படிக்க: தடை நீக்கம்: ஓடிடி 'காந்தாரா'வில் வராஹரூபம் பாடல் எப்போது?
அண்மையில் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், சசி தரூரின் பெயரினைக் குறிப்பிடாமல் கட்சியில் தனித்து செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.