வேலையில்லா இளைஞர்கள் 2,000 பேரை சந்திக்கிறார் ராகுல் காந்தி!
ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று கர்நாடகத்தில் வேலைவாய்ப்பில்லா 2,000 இளைஞர்களை சந்தித்துப் பேசுகிறார்.


ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று கர்நாடகத்தில் வேலைவாய்ப்பில்லா 2,000 இளைஞர்களை சந்தித்துப் பேசுகிறார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ எனும் ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் செப்.7-ல் தொடங்கிய நடைபயணம், கேரளத்தை கடந்து தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வருகின்றது.
கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்து வரும் சூழலிலும், மழையில் நனைந்தபடி நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.
இன்று காலை 6.30 மணிக்கு சித்ரதுர்கா மாவட்டம் சால்கெரே பகுதியில் நடைபயணத்தை தொடர்ந்த ராகுல், இரவு 7 மணிக்கு ஹிரேஹள்ளி என்ற பகுதியில் ஓய்வெடுக்கவுள்ளார்.
இதனிடையே இன்று கர்நாடகத்தில் சித்ரதுர்காவில் வேலைவாய்ப்பில்லாத சுமார் 2,000 இளைஞர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக அக்கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
தற்போது 900 கிமீ வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாள்களுக்கு 12 மாநிலங்களில் 3,570 கி.மீ. நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | காங். தேர்தலில் கார்கேவுக்கு சோனியா காந்தி ஆதரவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...