சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்: ராகுல் காந்தி

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளது என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

News image
Updated On :15 அக்டோபர் 2022, 12:38 pm

DIN

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளது என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 38-ஆவது நாளாக, கா்நாடகத்தில் 15-ஆவது நாளாக சனிக்கிழமை பயணித்தது. இதனிடையே பல்லாரியில் இன்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். 

அதில், பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நாட்டை துண்டாடுவதாக ஆயிரக்கணக்கான மக்கள் கருதுவதால் இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ யாத்ரா என்று பெயரிட்டோம். இன்று இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக பிரதமர் கூறியிருந்தார். அந்த வேலைகள் எங்கே போனது? மாறாக, கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். கர்நாடகத்தில் பாஜக அரசு எஸ்சி மற்றும் எஸ்டிக்கு எதிரானது இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.