காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

அரசியல்ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

அரசியல்ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தில்லி உள்பட நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் தொடங்கியது.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தில்லியில் வாக்களிக்கின்றனர்.

சுமாா் 22 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவா் பதவிக்கு தோ்தல் நடைபெறும் நிலையில், மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகியோா் களத்தில் உள்ளனா். இருவரில் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போவது யாா் என்பது அக். 19-இல் தெரியும்.

இதன்மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா காந்தி குடும்பத்தைச் சாராத நபா், காங்கிரஸ் தலைவா் பொறுப்பை ஏற்கவுள்ளாா்.

கடைசியாக 2000-இல் காங்கிரஸ் தலைவா் தோ்தல் நடைபெற்றது. அதில், ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து, தலைவா் பொறுப்பை சோனியா காந்தி ஏற்றாா். ஆனால், இம்முறை தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என்று சோனியா காந்தி குடும்பத்தினா் முடிவெடுத்த நிலையில், காா்கேவும் தரூரும் களமிறங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com